
வேலூர் தொரப்பாடியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பாலமுருகன் (வயது 18), ராமு என்பவரின் மகன் முத்துவேல் (19). இவர்கள் இருவரும் கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் பைக்கில், கஸ்பாவில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென அவர்கள் சென்ற பைக் நிலை தடுமாறியதில் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் இருவரும் மேம்பாலத்திலிருந்து கீழே உள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்துள்ளனர். அதில் முத்துவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்ட அந்த பகுதியில் இருந்தவர்கள் பாலமுருகனை மீட்டு அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த பாலமுருகன் சிகிச்சை பலனின்றி உயிர்ழந்தார். இதுகுறித்து தகவல் அறித்த வேலூர் தெற்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து உயிரிழந்து கிடந்த முத்துவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!
தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!
ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!
பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!
அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!