ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் குண்டர் சட்டம் பாய வேண்டும்... வீரலட்சுமி ஆவேசம்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு
ஃபெலிக்ஸ் ஜெரால்டு

சவுக்கு சங்கரின் கணக்கில் வராத கோடிக்கணக்கான சொத்துகளை முடக்க வேண்டும். சவுக்கு சங்கரை தொடர்ந்து ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் குண்டர் சட்டம் பாய வேண்டும் என்று தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி வலியுறுத்தியுள்ளார்.

பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் மீது பல்வேறு தரப்பில் இருந்து 8 வழக்குகள் பதிவாகியுள்ளன. கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சவுக்கு சங்கரின் கணக்கில் வராத கோடிக்கணக்கான சொத்துக்களை முடக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழர் முன்னேற்ற படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி, வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரியிடம் கோரிக்கை மனுவை இன்று அளித்துள்ளார்.

வீரலட்சுமி
வீரலட்சுமி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சவுக்கு சங்கர் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கி குவித்து வைத்துள்ளார். இந்த பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது, அவருக்கு யார் கொடுத்தார்கள், இவர் யாருக்கு பினாமியாக செயல்படுகிறார் என்று வருமான வரித்துறையில் புகார் அளித்துள்ளேன். சவுக்கு சங்கர் வாங்கி வைத்திருக்கின்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்க வேண்டும்.

சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு
சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு

சவுக்கு சங்கர் ஒரு தந்தையாக தனது கடமையைச் செய்யாமல் அதிலிருந்து வெளியே வந்தவர். அவரது இரண்டாவது மனைவி மாதம் 2,000 ரூபாய் கேட்டு ஜீவனாம்சம் கேட்டு வருகிறார். இவரது சொந்த வாழ்க்கையே இப்படி இருக்க, மற்ற பெண்களைக் குறித்து எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இழிவாகப் பேசி இருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை, தவறு செய்தவரை விட அதை தூண்டுபவர் தான் முதல் குற்றவாளி. ஆகையால், ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் குண்டர் சட்டம் பாய வேண்டும்" என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in