வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

வாச்சாத்தி வன்முறை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தியில் கடந்த 1992ம் ஆண்டு சந்தன கட்டைகள் இருப்பதாக வந்த தகவலின் பேரில், காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது 18 இளம் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியதாக 269 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் அளித்த தண்டனையை எதிர்த்து, 17 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

வாச்சாத்தி வழக்கு
வாச்சாத்தி வழக்கு

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 215 பேர் குற்றவாளிகள் என உத்தரவிட்டதோடு, குற்றம் புரிந்தவர்களிடம் 5 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. சுமார் 30 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு கிடைக்கப்பெற்ற இந்த தீர்ப்பு, வாச்சாத்தி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலான தீர்வாக அமைந்திருந்தது.

வாச்சாத்தி வழக்கு தீர்ப்பை வரவேற்கும் மக்கள்
வாச்சாத்தி வழக்கு தீர்ப்பை வரவேற்கும் மக்கள்

இந்நிலையில் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான வனத்துறை அதிகாரி நாதன், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கிற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in