சாலையோரக் கடையில் பல்பு திருட்டு: சிசிடிவி கேமராவில் சிக்கிய போலீஸ்காரர்

சாலையோரக் கடையில் பல்பு திருட்டு: சிசிடிவி கேமராவில் சிக்கிய போலீஸ்காரர்

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடைக்கு வெளியில் இருந்த மின்விளக்கை திருடும் வீடியோ வைரலானதை அடுத்து, போலீஸ்காரர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தின் புல்பூர் காவல் நிலையப் பகுதியில் பணியில் இருந்தவர் கான்ஸ்டபிள் ராஜேஷ் வர்மா.

தசரா விழாவின் போது இவர் இரவுப் பணியில் இருந்தார்.

இச்சம்பவம் அக்டோபர் 6ம் தேதி நடந்தது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மறுநாள் காலை பல்ப் காணாமல் போனதைக் கவனித்த கடைக்காரர், பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய போலீஸ்காரர் ஒருவர் மின்விளக்கைத் திருடும் சிசிடிவி காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அந்த வீடியோவில், ராஜேஷ் வர்மா சாலையில் வருகிறார். அப்போது மூடப்பட்டிருந்த கடையின் முன்பு நின்று, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பல்பைக் கழற்றி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இந்த சர்ச்சையைத் தொடர்ந்து அந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் சமீபத்தில்தான் பதவி உயர்வு பெற்று, கடந்த எட்டு மாதங்களாகத்தான் புல்பூர் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டார்.

சமீபகாலமாக உ.பி காவல்துறைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய இரண்டாவது சம்பவம் இதுவாகும். சில நாட்களுக்கு முன்பு கான்பூரில், நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த நபரின் பாக்கெட்டில் இருந்து மொபைல் போனை திருடிய போலீஸ்காரர் ஒருவர் பிடிபட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in