மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆஜராக உத்தரவு

மத்திய இணை அமைச்சர்
எல்.முருகன் ஆஜராக உத்தரவு

முரசொலி அறக்கட்டளை சார்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள முரசொலி அறக்கட்டளைக் கட்டிடம், பட்டியலின பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக எல். முருகன் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் மீது முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கில் கடந்த முறை எல்.முருகனுக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இருப்பதால் கலந்து கொள்ள முடியாது என அவர் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்றும் நீதிமன்றத்தில் எல்.முருகன் ஆஜராகவில்லை. இதையடுத்து ஏப்ரல் 22-ம் தேதி எல்.முருகன் ஆஜராக வேண்டும் என சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் நீதிபதி அலீசியா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in