இஸ்ரேல் சிறைகளில் பாலியல் வன்முறை, சித்ரவதைக்கு ஆளாகும் பாலஸ்தீன கைதிகள்: ஐநா பிரதிநிதி கண்டனம்

சிறை
சிறை
Updated on
2 min read

இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகள் பாலியல் வன்முறைகள் மற்றும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்படுவதாக ஐநா பிரதிநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு, பாலஸ்தீன கைதிகளை கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவது தொடர்பான பல குற்றச்சாட்டுகளை விசாரிக்க, ஐக்கிய நாடுகளின் நிபுணர் வியாழனன்று இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்தார்.

ஐ.நா
ஐ.நா

சித்ரவதைகள் தொடர்பான ஐநா-வின் சிறப்பு அறிக்கையாளர் ஆலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கைதிகள் அடிக்கடி தாக்கப்படுவதாகவும், சிறை அறைக்கு உள்ளாகவும் கண்களை கட்டி வைத்திருப்பதாகவும், நீண்ட நேரம் கைவிலங்கிடப்பட்டுள்ளதாகவும் புகார்கள் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய அரசிடமிருந்தோ அல்லது அதன் ராணுவத்திடமிருந்தோ உடனடி எதிர்வினை எதுவும் இல்லை. ஆனால், ‘இஸ்ரேலிய மற்றும் சர்வதேச சட்டங்களின்படி தங்கள் ராணுவம் செயல்படுவதாகவும், கைதிகளுக்கு உணவு, தண்ணீர், மருந்து மற்றும் உடைகள் முறையாக வழங்கப்படுவதாகவும்’ தனி அறிவிப்பில் இஸ்ரேல் தெரிவித்து இருந்தது.

சில கைதிகளை தூங்க அனுமதிக்காது சித்ரவதை செய்யப்படுவதாகவும் பாலியல் வன்முறைகளால் அச்சுறுத்தப்படுவதாகவும், அவமானகரமான செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும், இஸ்ரேல் சிறைகளில் மலிந்திருக்கும் துயரங்கள் தொடர்பாக தனக்கு வந்த புகார்களின் அடிப்படையில் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். அவற்றில் இழிவான தோற்றங்களில் புகைப்படம், வீடியோ எடுப்பதும் அடங்கும்.

"வளர்ந்து வரும் மீறல் முறை, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததுடன், பாலஸ்தீனியர்களை மேலும் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கும் சூழலை உருவாக்குகிறது" என்றும் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் குண்டுவீச்சில் சிதிலமான காசா
இஸ்ரேல் குண்டுவீச்சில் சிதிலமான காசா

"இந்த புகார்கள் தொடர்பாக உடனடியாக, பாரபட்சமின்றி மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் இஸ்ரேல் விசாரிக்க வேண்டும். தளபதிகள் உட்பட அனைத்து மட்டங்களிலும் பொறுப்பேற்க வேண்டும், அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெறவும் உரிமை உண்டு" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் போராளிகளால் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; மற்றும் 253 பேர் காசாவுக்கு கடத்திச் செல்லப்பட்டனர். இஸ்ரேலின் பதில் தாக்குதல் காரணமாக காசாவில் இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீர் சாமி தரிசனம்... அடுத்த படத்துக்கான பணிகள் துவக்கமா?

வீடியோ காலில் எதற்கு பேசுற? மனைவியைக் கொலை செய்து புதைத்த கணவன்!

வங்கக்கடலில் 'ரெமல்' புயல்... 26ம் தேதி கரையைக் கடக்கும் என கணிப்பு!

அதிர்ச்சி வீடியோ... மருத்துவமனைக்குள் பாய்ந்த ஜீப்... அவசர சிகிச்சை பிரிவு வரை ஓட்டிச் சென்ற போலீஸார்!

மெக்சிகோவில் பிரச்சாரத்தில் மேடை சரிந்து விபத்து: 5 பேர் பலி; 50 பேர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in