மத்திய பிரதேசம் உஜ்ஜைன் நகரில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ரத்த காயத்துடன் வீடு வீடாக சென்று உதவி கேட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை உருவாக்கியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநர் உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினில் 12 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இரத்த காயங்களுடன் மிகவும் சோர்வடைந்த நிலையில், தெருவில் அரை நிர்வாணத்துடன் ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டியுள்ளார், ஆனால் அவருக்கு உதவி கிடைக்கவில்லை.
இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினில் இருந்து 15 கிமீ தூரத்தில் இருக்கும் பாத்நகர் என்ற பகுதியில் நடந்து உள்ளது. பாத்நகர் பகுதியில் நேற்று அந்த சிறுமி உடையின்றி உடல் முழுக்க ரத்தத்தோடு நடந்து சென்றுள்ளார். அவர் அங்கே இருக்கும் எண்ணற்ற வீடுகளின் கதவை தட்டி உதவி கேட்டுள்ளார்.
எனக்கு ஆடை இல்லை. உடலில் ரத்தமாக இருக்கிறது. அதனால் என்னை காப்பாற்றுங்கள். எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எனக்கு உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அனைத்து சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. அவர் உதவி கேட்ட எல்லா வீட்டிலும் உள்ள ஆண்கள், பெண்கள் அவரை துரத்தி அடித்து உள்ளனர். நீ உள்ளே வரக்கூடாது. வெளியே போ என்று துரத்தி அடித்துள்ளனர். சிலர் அவரிடம் பேசாமல் கூட.. சூ.. சூ என்று கூறி துரத்தி அடித்துள்ளனர். சிலரிடம் எனக்கு உதவி வேண்டாம், தண்ணீராவது கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் அதுவும் கூட அவருக்கு கிடைக்கவில்லை.
போலீசார் அளித்த தகவலின் படி, சிறுமி இறுதியில் ஒரு ஆசிரமத்தை அடைந்தார். அங்கேதான் அவருக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. அங்கே ஒரு சாமியார் சிறுமியை ஒரு துண்டுடன் மூடி, மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அதோடு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். மாவட்ட மருத்துவமனையில் சிறுமியின் மருத்துவப் பரிசோதனையில் பலாத்காரம் உறுதி செய்யப்பட்டது. கூட்டு பலாத்காரம் அவர் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு அந்த சிறுமி மிக மோசமாக தாக்கப்பட்டு இருக்கலாம், கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அந்த சிறுமியால் பேச முடியவில்லை. அவரின் வாய் உடைக்கப்பட்டு உள்ளது. இதனால் கஷ்டப்பட்டு பேசி உள்ளார். இதன் காரணமாக அவரால் எதையும் சொல்ல முடியவில்லை. அவரின் பேச்சை பார்த்தால் அவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவருக்கு ரத்தம் கொடுக்க கூட யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் போலீசாரே கடைசியில் அவருக்கு ரத்தம் கொடுத்தனர்.