காதலுக்கு எதிர்ப்பு; மாமியார், மருமகள் வெட்டிக்கொலை!

வெட்டிக் கொலை
வெட்டிக் கொலை

மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையம் அருகே இரு பெண்களை வெட்டிக் கொன்ற வாலிபரும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த கொடூரத்தில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இரு பெண்கள் கொலை
இரு பெண்கள் கொலை

மதுரை எல்லீஸ் நகர் போடி லைனைச் சேர்ந்தவர் மணிகண்டன். எஸ்.எஸ்.காலனி காவல் நிலையம் அருகே வசித்து வருகிறார். இவரது மனைவி அழகுபிரியா(22), தாயார் மகிழம்மாள்(65) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இதனால் மணிகண்டனின் சகோதரி மகாலட்சுமியும், அவரது மகன் குணசீலன்(20) அவ்வப்போது இங்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் மணிகண்டன் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் அவரது தாய் மற்றும் மனைவி ஆகிய இருவரும் வீட்டின் பின்புறம், கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளனர். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வாலிபர் குணசேகரன் மற்றும் அவரது நண்பர் ஹரியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, வெளியூர் சென்று திரும்பிய மணிகண்டன், வீட்டில் மனைவி மற்றும் தாய் இல்லாதது குறித்து மருமகன் குணசேகரனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், இருவரும் ஆடி அமாவாசைக்கு கோயிலுக்கு சென்றிருப்பதாக கூறியுள்ளார். அப்போது வீட்டில் சிதறி கிடந்த ரத்தம் குறித்து கேட்ட போது வீட்டு நாய், கோழியை கடித்ததால் சிந்திய ரத்தம் என கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை பொழுது விடிந்தும் கோயிலுக்கு சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் வீட்டின் பின்புறம் அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். அங்கிருந்த குணசீலனும், ஹரியும் வீட்டில் இருந்து தலைமறைவாகியுள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அவர்களோ முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதன் பின்னர் போலீஸார் தங்கள் விசாரணையை நெருக்கவே, குணசீலனும், ஹரியும் சேர்ந்து இரு பெண்களையும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். குணசீலன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அதற்கு அத்தை அழகுபிரியாவும், அம்மாச்சி மகிழம்மாளும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் இருவரையும் கொலை செய்தததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in