கைது செய்யப்பட்ட கோச் உதவியாளர்கள்
கைது செய்யப்பட்ட கோச் உதவியாளர்கள்

பரபரப்பு... ரயிலில் மது கடத்திய கோச் உதவியாளர்கள்... விஐபிகளுக்கு சப்ளை செய்தது அம்பலம்!

கான்பூரில் ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதுடன், அவற்ற விஐபிகளுக்கு விற்பனை செய்ததும் அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக 2 ரயில்வே ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கான்பூர் ரயில் நிலையம்
கான்பூர் ரயில் நிலையம்

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் ரயில்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக ஆர்பிஎஃப் வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கான்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில்களை நேற்று சோதனை செய்தனர்.

அப்போது கான்பூர் சென்ட்ரல் வழியாக செல்லும் ரயில்களில் ஒரு கும்பல் மதுபாட்டில்களைக் கடத்துவது தெரிய வந்தது. ஒரு ரயிலில் இரண்டு ரயில்வே ஊழியர்கள் மதுபாட்டில்கள் கடத்தியதைக் கண்ட ஆர்பிஎஃப் வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சட்டவிரோதமாக ரயிலில் மதுபாட்டில்களை கடத்தி ரயிலில் பயணம் செய்யும் விஐபிகளுக்கு அதிக விலைக்கு அவர்கள் விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் ஆர்பிஎஃப் எஸ்.ஐ அமித் திரிவேதி கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில்வே ஊழியர்கள், கும்பல் மூலம் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. அந்த கும்பலையும் ஆர்பிஎஃப் தேடி வருகிறது. ரயில்வே ஊழியர்களே ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி சிக்கியிருப்பது கான்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in