நெல் கொள்முதலில் கோடிக்கணக்கில் மோசடி: சிபிசிஐடி-யிடம் சிக்கிய அரசு அதிகாரிகள்

கைது
கைது

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு நெல் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்து அரசிற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக மண்டல மேலாளர் உள்ளிட்ட இருவர் சிபிசிஐடி காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்வதில் தொடர்ச்சியாக முறைகேடு நடப்பதாகப் புகார்கள் எழுந்தன. இந்த புகாரையடுத்து கடந்த மாதம் 4-ம் தேதி சிபிசிஐடி காவல் துறையினர் முறைகேடு தொடர்பாக நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இந்த வழக்கின் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி உள்ளிட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் முதற்கட்டமாக விசாரணையைத் தொடங்கினர். இதையடுத்து நிலம் மற்றும் ஆவணங்களின்றி நெல் கொள்முதல் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக நெல் வியாபாரிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த மாவட்டங்களில் சுமார் ரூ.8.58 கோடிக்கு அரசு அதிகாரிகள் துணையுடன், ஊழல் நடந்திருப்பது சிபிசிஐடி விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நெல் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்து அரசிற்கு சுமார் 8.58 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுத்திய கொள்முதல் நிலைய மேற்பார்வையாளர் மகேஷ், திருவண்ணாமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருநெல்வேலி மாவட்டத்தின் மண்டல மேலாளர் கோபிநாத் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in