
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே முன்னால் சென்ற டூவீலர் மீது கார் மோதியதில் லாரி டிரைவர்கள் இருவர் பலியாயினர்.
ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி அருகே பீர்க்கன்குறிச்சியைச் சேர்ந்த லாரி டிரைவர்கள் இளங்கோவன் (41). எமனேஸ்வரம் கர்ணன் (41) நண்பர்களாக இவர்கள் இருவரும் பார்த்திபனூரில் இருந்து பரமக்குடி நோக்கி நேற்று காலை 11:30 மணியளவில் இருசக்கர சென்றனர்.
பார்த்திபனூர் அருகே பெருங்கரை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பரமக்குடி சுப்பிரமணியன் தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார்.
முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அந்த கார் எதிர்பாராத விதமாக மோதியதில் இளங்கோவன், கர்ணன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். அதில் பலத்த காயமடைந்த இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி மதியம் 3:30 மணிக்கு இருவரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து பார்த்திபனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.