
கேரளாவில் தனியார் பேருந்து - ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில் ஏற்பட்ட தீயால், ஆட்டோ ஓட்டுநர் உட்பட 2 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
கேரளா மாநிலம், கண்ணூர் அருகே பானூர் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் (36) தனது ஆட்டோவில் ஷஜீஷ் என்பவருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது தலச்சேரி - கதிரூர் சாலையில் எதிரே வேகமாக வந்த தனியார் பேருந்து, ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் ஆட்டோ சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. எரிவாயுவில் இயங்கும் ஆட்டோ என்பதால் திடீரென தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ முழுவதும் தீ வேகமாக பரவியது.
காயம் காரணமாக ஆட்டோவில் இருந்து அபிலாஷ், ஷஜீஷ் ஆகிய இருவராலும் வெளியே வரமுடியவில்லை. இருவர் மீதும் தீப்பிடித்தது. யாராலும் ஆட்டோவை நெருங்க முடியாததால் இரண்டு பேரும் தீயில் கருதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த தலசேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஆட்டோவில் இருந்த இருவரும் தீயில் கருகி உயிரிழந்தனர். நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார், இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் ஆட்டோ தீப்பிடித்து 2 பேர் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!
கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!
ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!
ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!