அதிகாலையில் சோகம்... நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்ட பைக்குகள்... 2 பேர் துடி துடித்துச் சாவு!

சென்னையில் நடைபெற்ற கொடூர விபத்து
சென்னையில் நடைபெற்ற கொடூர விபத்து

சென்னையில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவன் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து
விபத்து

சென்னை அம்பத்தூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹார்ஸ்(20) . இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இன்று அதிகாலை இவர் செல்போன் கடையில் பணியாற்றும் தனது நண்பரான அம்பத்தூரைச் சேர்ந்த தருண்(23) என்பவருடன் ராயப்பேட்டையில் நடைபெற்ற தசரா விழாவில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

பின்னர் விழா முடிந்து ஹார்ஸ் மற்றும் தருண் ஆகிய இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நியூ ஆவடி ரோடு அருகே வேகமாக வந்துக்கொண்டிருந்த போது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹார்ஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தருண் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இரண்டு பைக் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மற்றொரு வாகனத்தை ஓட்டிவந்த வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த மருந்து கடை ஊழியர் ஜெயபிரகாஷ் (23) என்பவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.இவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த தனியார் கல்லூரி மாணவன் பழனிவேல் (20) காயங்களுடன் உயிர் தப்பினார்.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மற்றொரு வாகனத்தை ஓட்டிவந்த வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த மருந்து கடை ஊழியர் ஜெயபிரகாஷ் (23) என்பவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த தனியார் கல்லூரி மாணவன் பழனிவேல் (20) காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த ஜெயபிரகாஷ், ஹார்ஸ் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயமடைந்த தருண், பழனிவேல் இருவரை மீட்டு சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இவ்விபத்து குறித்து போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கல்லூரி மாணவன் உட்பட இருவர் உயிரிழந்த நிலையில் இருவர் காயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in