
மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மயிலாடுதுறை காவேரி நகரை அடுத்த ஆரோக்கியநாதபுரம் பகுதியில் இயங்கி வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையின் கீழ் ஏடிஎஸ்பி, டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் போலீஸார் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சென்ற வாரம் நள்ளிரவு நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஓர் ஏ.சி அறையில் ஆண், பெண் காவலர்கள் இரண்டு பேர் தனிமையில் இருந்தாக கூறப்படுகிறது.
இத்தகவல் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஆண் காவலர் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியில் உள்ளவர் என்பது தெரியவந்தது. மேலும், அந்த பெண் காவலர் குத்தாலம் காவல் நிலையத்தில் பணியில் உள்ளவர் என்றும், இருவரும் திருமணம் ஆகாதவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு, ஏடிஎஸ்பி வேணுகோபால், அறிக்கை அளித்தார். அதன் அடிப்படையில், ஒழுங்கீனமாகவும் தவறாக நடந்து கொண்ட காவலர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவிட்டார். இச்சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சேலையில் ஒய்யாரமாய் வலம் வரும் பிரபல நடிகை
உஷார்... சிக்கன் பிரியாணியால் சுயநினைவை இழந்த 3 பேர்!
மணி ரத்னத்தால வாழ்க்கையே போச்சு.. நாசம் பண்ணிட்டார்... பொதுவெளியில் புலம்பிய பிரபலம்!
கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 2ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு