`பொமரேனியன்' நாய்க்குட்டியைத் திருட புல்லட்டில் வந்த இளைஞர்கள்: காட்டிக் கொடுத்தது சிசிடிவி

புல்லட்டில் வந்து நாய்க்குட்டியை திருடிச் சென்ற இளைஞர்கள்
புல்லட்டில் வந்து நாய்க்குட்டியை திருடிச் சென்ற இளைஞர்கள்

வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த பொமரேனியன் வகை நாயை புல்லட்டில் வந்த இரு இளைஞர்கள் திருடிச்சென்ற சென்ற சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை இஸ்மாயில்புரம் பகுதியை சேர்ந்தவர் ராணி. இவர் தனது வீட்டில் பொமரேனியன் இனத்தை சேர்ந்த வெள்ளை நிற நாய்க்குட்டி ஒன்றை பல ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த நாய்க்குட்டி வைகை ஆற்றை ஒட்டியுள்ள சாலைப்பகுதிக்குச் சென்றுள்ளது.

அழகான நாய்க்குட்டி ஒன்று உரிமையாளர் இன்றி சாலையில் திரிவதை கண்ட புல்லட்டில் வந்த இரு இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விளையாடிக்கொண்டிருந்த நாய்க்குட்டியை அங்கிருந்து திருடிச்சென்றுள்ளனர்.

இது குறித்து, நாய்க்குட்டியின் உரிமையாளர் ராணி தெப்பக்குளம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புல்லட்டில் வரும் இளைஞர்கள் நாய்க்குட்டியை தூக்கிச்செல்லும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

நாய்க்குட்டியைத் திருடிச் செல்லும் இளைஞர்
நாய்க்குட்டியைத் திருடிச் செல்லும் இளைஞர்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in