அதிர்ச்சி: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கல்லூரி மாணவி விடிய, விடிய பலாத்காரம்!

பலாத்காரம்
பலாத்காரம்

கல்லூரி மாணவியை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வாலிபர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரச் சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாபா அணு ஆராய்ச்சி மையம்
பாபா அணு ஆராய்ச்சி மையம்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பால்கர் மாவட்டத்தில் உள்ள போய்சரில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் 19 வயது வணிகவியல் கல்லூரி மாணவி வசித்து வந்தார்.

அவர் வழக்கமாக மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள (BARC) தனது குடியிருப்பில் தங்குவார். தனது தந்தை வேலைக்குச் சென்ற பின்பு நவ-15-ம் தேதி பக்கத்து வீட்டில் வசிக்கும் அஜித்குமார் யாதவ் (26) என்பவர் வீட்டிற்கு மாணவி சமையல் பொருளைக் கடனாகப் பெறச் சென்றார். அஜித்குமாரின் தந்தை பாபா அணு ஆராய்ச்சி மையப் பணியாளர் ஆவார்.

பலாத்காரம்
பலாத்காரம்

அப்போது அஜித்குமார் வீட்டில், அவரது நண்பரான கோவண்டியைச் சேர்ந்த பிரபாகர் யாதவ் (30) இருந்துள்ளார். சமையல் பொருட்கள் வாங்க வந்த மாணவிக்கு, அஜித்குமார் குளிர்பானம் குடித்துள்ளார். இதைக் குடித்த சில நிமிடங்களிலேயே அவர் மயங்கினார்.

இதையடுத்து அவரை இரவு முழுவதும் இருவரும் சேர்ந்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்த போது, தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை மாணவி உணர்ந்தார். இதன்பிறகு கட்டிடத்தில் தங்கியிருந்த தனது நெருங்கிய நண்பர்கள் சிலருக்கு இந்த கொடூர சம்பவம் குறித்து தெரிவித்தார். இதுகுறித்து நவ.16-ம் தேதி போலீஸில் மாணவி வாக்குமூலம் அளித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அஜித்குமார் வீட்டில் இருந்து குளிர்பானத்தின் மாதிரிகளை போலீஸார் கைப்பற்றி தடவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். அஜித்குமார் யாதவ், பிரபாகர் யாதவ் ஆகியோரை கைது செய்துள்ளதாக போலீஸார் இன்று தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவியின் மருத்துவப் பரிசோதனை அறிக்கை வந்த பின் குற்றப்பத்திரிகையில் அது ஆதாரமாக சேர்க்கப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் கூறினார்.

கைது செய்யப்பட்ட இருவரையும் நவ.20-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in