14 வயது மாணவியை சீரழித்த படுபாதக டியூஷன் ஆசிரியர்... அதிரடி உத்தரவு!

டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லி உயர் நீதிமன்றம்

14 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட டியூஷன் ஆசிரியருக்கு ஜாமீன் வழங்க டில்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

டெல்லியைச் சேர்ந்த ஒரு மாணவி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் 2012-ம் ஆண்டு, தான் 9 ம் வகுப்பு படித்தபோது, ஒரு தனிப்பயிற்சி மையத்திற்குச் சென்றதாகவும், அங்கிருந்த ஒரு ஆசிரியர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகார் அளித்துள்ளார். அந்த சிறுமியை  திருமணம் செய்து கொள்வதாக அந்த ஆசிரியர் சிறுமியிடம் 2017-ம் ஆண்டு வரை உறுதி அளித்தவாறு இருந்தார். 

அந்த சாக்குப்போக்கில் அச்சிறுமியுடன் உடல் ரீதியான உறவை அவர் மேற்கொண்டிருந்தார். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமி இரண்டு முறை கர்ப்பமானார். ஆனால், கர்ப்பம் கலைக்கப்பட்டது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கெனவே திருமணமானவர் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு ஆசிரியர் தரப்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்து பிறப்பித்த உத்தரவில், '2012 -ம் ஆண்டு சிறுமிக்கு முதல் முறையாக பாலியல் வன்கொடுமை நடந்தபோது, அவரது வயது 14-ஆக மட்டுமே இருந்துள்ளது. இருவருக்கும் இடையேயான உறவு சம்மதத்தின் பேரில் நடைபெற்றதாக கூறும் மனுதாரரின் வழக்கறிஞரின் வாதத்தில் எந்தத் தகுதியும் இல்லை. 

அச்சிறுமியின் சம்மதம், சட்டத்தின் பார்வையில் சம்மதம் இல்லை. மேலும், சம்பந்தப்பட்ட நேரத்தில் அவர் ஆசிரியராக, ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருந்தார். ஏனெனில், அவர் கற்பித்த பயிற்சி மையத்தில் அச்சிறுமி படித்துள்ளார். எனவே, ஜாமீன் வழங்குவதற்கான மனு நிராகரிக்கப்படுகிறது' என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக நீதிமன்றம் கூறியதாவது: குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை மற்றும் புகார் அளித்த நபரிடம் விசாரணை நீதிமன்றத்தால் இன்னும் விசாரிக்கப்படாமல் இருக்கிறது. இதனால், ஜாமீன் வழங்குவதற்கு எந்த காரணமும் இல்லை. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் தாம் ஏற்கெனவே திருமணமான விவரத்தை புகார்தாரரிடம் மறைத்து, அத்துடன் அவரை திருமணம் செய்வதாக பொய் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று சந்திர கிரகணம்... 8 மணி நேரம் தோஷம்... இரவு சாப்பிடக் கூடாதா?

வரலாற்று சாதனை... ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை வென்றது இந்தியா!

அதிர்ச்சி... கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; சிக்கியது கடிதம்!

தீபாவளி பண்டிகைக்கு 10,975 சிறப்புப் பேருந்துகள்...நவம்பர் 9 முதல் இயக்கப்படுகிறது!

கெளதம் மேனனுடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in