‘பெற்றோரை கோர்ட் வாசலில் நிக்க வச்சுடாதீங்க..’ இளைஞர்களுக்கு டிடிஎஃப் வாசனின் தாயார் வேண்டுகோள்!

வாசனை குளிக்க வைக்கும் தாய்
வாசனை குளிக்க வைக்கும் தாய்
Updated on
1 min read

’உங்களது பெற்றோர்களை எந்த காரணம் கொண்டும்  கோர்ட், ஜெயில் வாசலில் நிற்கவைத்து விடாதீர்கள்’ என்று யூடியூபர் டிடிஎஃப் வாசனின் தாயார் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விலையுயர்ந்த வெளிநாட்டு பைக்குகளை வாங்கி, இந்திய சாலைகளில் அதிவேகமாக ஓட்டுவதும், பைக் சாகசத்தில் ஈடுபடுவதையும் வாடிக்கையாகக் கொண்டவர் டிடிஎஃப் வாசன்.  பைக் வேடிக்கைகளை தனது யூ டியூப்பில் பதிவேற்றுவதன் மூலம் பணம் பார்த்துவந்த இந்த 23 வயது இளைஞரை லட்சக்கணக்கான சிறுவர்கள் பின்தொடர்கின்றனர்.

சாலை விதிகளை மீறி சாகசம் செய்துவந்த இவர்மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலை விபத்தில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து போலீசில் சிக்கிய இவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வாசன்
வாசன்

ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் இருந்த வாசன் நேற்று நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். சிறை வாசலுக்கு வந்த அவரது தாயார் மகனை கூட்டிச் சென்றார். டிடிஎஃப் வாசனை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரை வாசலிலேயே உட்கார வைத்து தலைகுளிக்க வைத்த அவரது தாயார், பின்னர் அங்கு கூடிய செய்தியாளர்களிடம் பேசினார்.

"பெற்றோரை இதுபோல் காவல்நிலையம், கோர்ட் மற்றும் ஜெயில் வாசலில் கொண்டுவந்து நிறுத்தி விடாதீர்கள்" என்று சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அப்போது அவர் அறிவுரை கூறினார். டிடிஎப் வாசன் தாயாரின் இந்த உருக்கமான பேட்டி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in