சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி!

திருச்சி பெண் காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படும் சவுக்கு சங்கர்
திருச்சி பெண் காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படும் சவுக்கு சங்கர்

பெண் காவலர்களை இழிவாக பேசிய வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்களை இழிவாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீஸார் பதிவு செய்த வழக்கில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் மீது திருச்சி, சேலம், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் திருச்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக வீடியோவை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டிருந்தார்.

பெண் காவலர்கள் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
பெண் காவலர்கள் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

இந்த வழக்கு தொடர்பாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுக்கு சங்கர், பெண் போலீஸார் பாதுகாப்புடன் திருச்சி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆஜர் படுத்தப்பட்டார்.

கோவையில் இருந்து திருச்சி அழைத்து செல்லும்போது, கரூர் அருகே உணவு வாங்கி கொடுக்க வாகனத்தை நிறுத்திய போது, தன்னை பெண் போலீஸார் தாக்கியதாக நேற்று சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்ட நீதிமன்றம், நேற்றைய தினம் திருச்சி சிறைச்சாலையில் அவரை அடைக்க உத்தரவிட்டிருந்தது.

திருச்சி நீதிமன்ற வளாகம்
திருச்சி நீதிமன்ற வளாகம்

இதையடுத்து இன்று மீண்டும் அவர் திருச்சியில் உள்ள கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபிரதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சவுக்கு சங்கரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென போலீஸார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபிரதா, ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் போதும், விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போதும் சங்கரை மருத்துவமனையில் பரிசோதித்து மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி அப்போது உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்காக சவுக்கு சங்கரை போலீஸார் அழைத்துச் சென்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in