கண்றாவி... மெட்ரோ ரயிலில் அத்துமீறிய காதலர்கள்... வைரலாகும் வீடியோ!

குளிர்பானம் குடிக்கும் அந்த ஜோடி
குளிர்பானம் குடிக்கும் அந்த ஜோடி

டெல்லி மெட்ரோவில் காதலர்கள் அத்துமீறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி
மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி

சமீபகாலமாக பொதுவெளியில் காதலர்களின் அளவுக்கு மீறிய சேட்டைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இது தொடர்பான காணொலிகள் இணையத்தில் பகிரப்பட்டு பலரின் எதிர்ப்புகளை பெற்றும் வருகிறது, அந்த வகையில் டெல்லி மெட்ரோ ரயிலுக்குள், உலகை மறந்து காதல் ஜோடி குளிர்பானத்தை சுவைக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை இருந்தாலும், எப்போதும் டிரெண்டிங்கில் இருப்பது டெல்லி மெட்ரோ ரயில் தான். டெல்லி மெட்ரோவை போக்குவரத்திற்கு மட்டுமின்றி பல்வேறு வகையில் அப்பகுதி மக்கள் பயன்படுத்துவதே அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

காதலர்கள் கட்டிப்பிடித்து முத்தமிட்டுக் கொள்வது, கவர்ச்சி உடையில் செல்வது, நடனமாடுவது, மேக்கப் போட்டுக் கொள்வது என டெல்லி மெட்ரோ மினி பப்பாக மாறி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது டெல்லி மெட்ரோ ரயிலுக்குள் காதலன் குளிர்பானத்தை குடித்துவிட்டு அதனை காதலி வாயில் துப்பி உதட்டோடு முத்தம் வைக்கும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

பயணிகள் முகம் சுளிக்கும் வகையில், காதல் ஜோடி நடந்துக் கொண்டதை உடன் பயணித்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். காதல் ஜோடியின் இந்த செயலுக்கு பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மெட்ரோ ரயிலில் அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், மெட்ரோவின் வேகத்தை விட அத்துமீறலின் வீரியம் அதிகரித்து வருவதாக மற்ற பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி… தடம் புரண்ட விரைவு ரயில்... 6 பேர் பலி... பலர் காயம்!

ரூ. 3.48 கோடியை குப்பையில் கொட்டிய தமிழக அரசு; மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 1,00,000 சிம்கார்டுகள் வீணடிப்பு!

HBD SNEHA : ‘புன்னகை இளவரசி’ நடிகை சிநேகா பிறந்தநாள்!

போலி சான்றிதழ்... 24 வருடமாக வேலை செய்த அரசு பள்ளி ஆசிரியை!

அதிர்ச்சி... நள்ளிரவில் வெடித்து சிதறிய செல்போன் சார்ஜர்; பற்றி எரிந்த வீடு... 3 பேருக்கு தீவிர சிகிச்சை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in