ஓபிஎஸ் வார்டு வாக்காளர்களுக்கு அதிமுக நிர்வாகி ஆபாச அர்ச்சனை

வைரல் வீடியோவால் பரபரப்பு
ஓபிஎஸ் வார்டு வாக்காளர்களுக்கு
அதிமுக நிர்வாகி  ஆபாச அர்ச்சனை

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வசிக்கும் 21-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் மஞ்சுளா முருகன். இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட சந்தானலெட்சுமி வெற்றி பெற்றார்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தும் வெற்றி பெற முடியவில்லையே என்ற ஆத்திரத்தில், வாக்காளர்களை அதிமுக வேட்பாளர் மஞ்சுளா முருகன் ஆபாசமாகவும், இழிவாகவும் பேசும் வீடியோ, தேனி மாவட்டம் முழுவதும் தற்போது வைரலாகி வருகிறது.

இப்பிரச்சினை தொடர்பாக, தமிழ்ப்புலிகள் கட்சியின் சட்டமன்றத் தொகுதி செயலாளர் பாலா என்ற தமிழரசு தலைமையில் கட்சி நிர்வாகிகள், பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் முத்துக்குமாரிடம் இன்று புகார் அளித்தனர். அதில், ' அதிமுக மாவட்ட இணைச்செயலாளராக உள்ள மஞ்சுளா முருகனை எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை வழக்கில் கைது செய்ய வேண்டும்' என்று புகாரில் தெரிவித்துள்ளனர். பெரியகுளம் நகராட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த போது, மஞ்சுளா முருகன் கவுன்சிலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in