பெட்ரோல் குண்டுவீச்சு... ஆளுநர் மாளிகை முன்பு நடந்தது என்ன?- போலீஸ் வெளியிட்டது வீடியோ

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்
Updated on
2 min read

பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி முற்றிலும் பொய்யானது என தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

ஆளுநர் மாளிகை வாசல் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்ற ரவுடியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை குற்றச்சாட்டுகளாக ஆளுநர் மாளிகை முன் வைத்து வருகிறது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், சம்பவம் நடந்த போது சிசிடிவியில் பதிவான காட்சிகள் மற்றும் புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ளார்.

பெட்ரோல் குண்டுகளுடன் ரவுடி கருக்கா வினோத்
பெட்ரோல் குண்டுகளுடன் ரவுடி கருக்கா வினோத்

இந்த புகைப்படங்களில், ரவுடி கருக்கா வினோத் தனியாக, 2 பெட்ரோல் குண்டுகளுடன் ஆளுநர் மாளிகை முன்பு நின்றிருப்பது தெரியவந்துள்ளது. அவரை போலீஸார் மடக்கி பிடித்து, எரிந்து கொண்டிருந்த பெட்ரோல் குண்டுகளை தள்ளிவிட்டு பறிமுதல் செய்யும் பதிவும் உள்ளது.

ரவுடி கருக்கா வினோத்தை மடக்கும் போலீஸ்
ரவுடி கருக்கா வினோத்தை மடக்கும் போலீஸ்

இதன் மூலம், ஆளுநர் மாளிகை வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீச முயற்சித்ததும், ஒருவர் மட்டுமே இதில் ஈடுபட்டதும் தெரியவருவதாக போலீஸார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரவுடியை கைது செய்யும் போலீஸ்
ரவுடியை கைது செய்யும் போலீஸ்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in