ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விபத்தில் உயிரிழப்பு... முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

7 பேர் பலியான விபத்து
7 பேர் பலியான விபத்து

திருவண்ணாமலை அருகே விபத்தில் உயிரிழந்த 7 பேருக்கும் தலா ரூ.2 லட்சம் ரூபாய் நிதியுதவியை அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரும், லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் மற்றும் நிதி உதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று காலை காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். விபத்தில் படுகாயம் அடைந்து திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in