அதிர்ச்சி... ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

விஜன்கரண், சங்கர்ராம்
விஜன்கரண், சங்கர்ராம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் விஜன்கரண் (27), சங்கர்ராம் (27). இவர்கள் இருவரும் நேற்று காலை ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை ஏற்றிக் கொண்டு திருவண்ணாமலை அடுத்த தேவனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக விருதுநகரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

குட்கா, கார் பறிமுதல்
குட்கா, கார் பறிமுதல்

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபத்துக்குள்ளான காருக்குள் ரூ.5 லட்சம் மதிப்புடைய குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விஜன்கரண், சங்கர்ராம் ஆகியோரை கைது செய்ததோடு, குட்கா மூட்டைகளையும், அவர்கள் வந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். விபத்திற்கு காரணமான லாரியையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து குற்றவாளிகள் இருவரையும் திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைத்தனர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in