தீயாய் பரவிய வதந்தி - ஆண் குழந்தைகளுக்கு திருஷ்டி கழித்த பெண்கள்!

செய்யார் திருஷ்டி கழித்த பெண்கள்
செய்யார் திருஷ்டி கழித்த பெண்கள்

கடந்த 14ம் தேதி நாடு முழுவதும் மகாளய அமாவசை அனுசரிக்கப்பட்டது. அன்று பலரும் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

செய்யாறு அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் இந்த ஆண்டு மகாளய அமாவாசை சரியாக தெரியவில்லை, உரிய நேரத்தில் பிறக்கவில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால், வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து என்றும், அவர்களுக்கு நோய், நொடி தாக்கும் அபாயம் இருப்பதாகவும் தகவல் பரவியதாக தெரிகிறது. இதனை போக்க, ஆண்கள் சட்டையை தீயிட்டு கொளுத்தினால் திருஷ்டி கழிந்து விடும் என்று சிலர் வதந்தியை பரப்பி உள்ளனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த கிராம மக்கள் ஆண் குழந்தைகள் அணிந்திருந்த துணிகளை வீட்டின் வாசல் முன்பு போட்டு நள்ளிரவில் தீயிட்டு கொளுத்தினர். ஒருவரை பார்த்து ஒருவர் என பல வீடுகளில் ஆண் குழந்தைகளின் துணிகள் எரிக்கப்பட்டன. மகாளய அமாவாசை சரியான நேரத்தில் வராததால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பழைய துணிகளை தீயிட்டுக் கொளுத்தி திருஷ்டி கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in