பொறியியல் மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை!

தற்கொலை செய்து கொண்ட மாணவி ஆஷா
தற்கொலை செய்து கொண்ட மாணவி ஆஷா
Updated on
1 min read

திருவள்ளூா் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூா் அருகே உள்ள ஆஞ்சநேயபுரம் 2-வது தெருவைச் சோ்ந்த மூா்த்தி. இவரது மகள் ஆஷா (20). இவா் தனியாா் கல்லூரியில் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் உணவு அருந்திவிட்டு, படிப்பதற்காக தனது அறைக்கு சென்றுள்ளார். ஆனால், மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் எழவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது தாய் மகளை எழுப்ப கதவை நீண்ட நேரமாக தட்டியுள்ளார். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோா் ஜன்னல் வழியாக பாா்த்தபோது மின் விசிறியில் ஆஷா தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். அதைப்பாா்த்து, அவர்கள் கடும் அதிா்ச்சி அடைந்தனா்.

இதையடுத்து, உடனடியாக திருவள்ளூர் கிராமிய கவால் நிலையத்திற்கு அவர்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in