அதிர்ச்சி; ஓடும் ரயிலில் கைக்குழந்தையுடன் ஏற முயன்ற வடமாநில பெண்: தவறி விழுந்து படுகாயம்!

கைக்குழந்தையுடன் ரயிலில் ஏறிய பெண்
கைக்குழந்தையுடன் ரயிலில் ஏறிய பெண்

திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயிலில் கைக்குழந்தையுடன் ஏற முயன்று தவறி விழுந்து படுகாயமடைந்த வடமாநில பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒடிசா மாநிலம் பர்கீஸ் பகுதியைச் சேர்ந்தவர் கபில் பகிரா. இவரது மனைவி காயத்ரி பகிரா (27). இவர்களும், உறவினர்கள் 27 பேரும் தீபாவளியையொட்டி மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசிக்க ரயிலில் தமிழகம் வந்தனர்.

கடந்த 11-ம் தேதி கோவை ஈஷா யோக மையத்துக்கு சென்று விட்டு குடும்பத்துடன் கடந்த 12-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு திருப்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தனர். அங்கிருந்து திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் ஏற திட்டமிட்டனர்.

காயமடைந்த காயத்ரி பகிரா
காயமடைந்த காயத்ரி பகிரா

அதிகாலை 2.55 மணிக்கு ரயில் திருப்பூர் நடைமேடை 2-ல் வந்து நின்றது. அவர்கள் ஏற வேண்டிய பெட்டி நிற்கும் இடம் தெரியாமல் தூரத்தில் நின்றதாக தெரிகிறது. அனைவரும் ஏறுவதற்குள் ரயில் கிளம்பியது.

அந்த நேரத்தில் காயத்ரி பகிரா கைக்குழந்தையுடன் ஓடி வந்து ரயில் படிக்கட்டில் ஏற முயன்றார். அப்போது தவறி கீழே விழுந்தார். இதில் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் விழுந்து அவர் படுகாயம் அடைந்தார். கையில் வைத்திருந்த குழந்தை நடைமேடையில் விழுந்ததால் பயணிகள் ஓடிச்சென்று மீட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதில் காயத்ரி பகிராவுக்கு வலது கை, இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருப்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே…


கவுண்டர் பையனைத்தான் கல்யாணம் கட்டுவோம்; உறுதிமொழி எடுத்த பெண்கள்: திமுக கூட்டணி கட்சி நிர்வாகியால் சர்ச்சை!

HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்!

காதலை ஏற்க காதலன் குடும்பம் மறுப்பு… காதலி மர்மமான முறையில் மரணம்!

உஷார்; தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை: ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!

அதிர்ச்சி: தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in