அதிர்ச்சி! தீபாவளி அன்று திடீர் மாயம்; கிணற்றில் சடலமாக மிதந்த கல்லூரி மாணவர்

மாணவர் வேடி
மாணவர் வேடி

திருப்பத்தூர் மாவட்டம், புங்கம்பட்டு நாடு ஊராட்சி, கல்லாவூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜு. இவருடைய மகன் வேடி(20). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்தவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீட்டைவிட்டுச் சென்றார். ஆனால், அதன் பிறகு மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் வீடு, உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் பதற்றமடைந்த பெற்றோர், திருப்பத்தூர் கிராமிய போலீஸில் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான கிணற்றில் கல்லூரி மாணவர் வேடி சடலமாக கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் கிராமிய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் அவரது சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வேடி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என திருப்பத்தூர் கிராமிய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே…


உஷார்; வங்கக்கடலில் நாளை உருவாகும் 'மிதிலி' புயல்: வானிலை மையம் எச்சரிக்கை!

இயக்குநர் மணிவண்ணன் மரணத்திற்கு இதுதான் காரணமா?: 10 ஆண்டுகளுக்குப் பின் வெளியான உண்மை!

'இந்த அரண்மனை வாடகைக்கு விடப்படும்': ஜோத்பூர் இளவரசியின் சுயதொழிலால் கரன்சி மழை!

உத்தரப் பிரதேசத்தில் டெல்லி-சஹர்சா வைசாலி அதிவிரைவு ரயிலில் தீவிபத்து... 19 பேர் காயம்

மகிழ்ச்சி... சிலிண்டர் விலை ₹ 57 குறைவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in