அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி... பிரசவம் பார்க்கிறார், ஊசி போடுகிறார்; காவலாளியால் பதறும் நோயாளிகள்

திருக்கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
திருக்கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு இரவு நேர காவலாளியாக தேவேந்திரன் என்பவர் பணி புரிந்து வருகிறார்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசி போடும் காவலாளி
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசி போடும் காவலாளி

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர் சரிவர பணிக்கு வராததால் அங்கு வரும் நோயாளிகளுக்கு தேவேந்திரன் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஊசி போடுவதும் ஒரு சில நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்ப்பதாகவும் தற்பொழுது புகார் எழுந்துள்ளது. மருத்துவர் எங்கே என கேட்டால், நான்தான் இங்கு எல்லாம் என்று கூறுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், பெண்கள் இவரிடம் பிரசவம் பார்த்து வருவதால் அச்சத்தினாலும், கூச்சத்தினாலும் பலர் இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறாமல் செல்வதாக கூறப்படுகிறது. அதேபோல், தேவேந்திரன் நோயாளிகளுக்கு ஊசி போட்டுவிட்டு பணம் பெறுவதாகும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மருத்துவமனை இரவு நேர காவலாளி தேவேந்திரன் நோயாளிகளுக்கு ஊசி போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

திருக்கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
விரைவு ரயில் விபத்து... பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு... 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
திருக்கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 1,00,000 சிம்கார்டுகள் வீணடிப்பு; அரசுக்கு 3.48 கோடி இழப்பு!
திருக்கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
HBD SNEHA : ‘புன்னகை இளவரசி’ நடிகை சிநேகா பிறந்தநாள்!
திருக்கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
போலி சான்றிதழ்... 24 வருடமாக வேலை செய்த தேனி ஆசிரியை- அதிகாரிகள் அதிர்ச்சி!
திருக்கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
அதிர்ச்சி... தூங்கும்போது இரவில் வெடித்து சிதறிய செல்போன் சார்ஜர்; பற்றி எரிந்த வீடு... 3 பேருக்கு தீவிர சிகிச்சை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in