ஷாக்... வாலிபர் மீது  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீச்சு: நள்ளிரவில் நடந்த பயங்கரம்!

ஷாக்... வாலிபர் மீது டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீச்சு: நள்ளிரவில் நடந்த பயங்கரம்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியில் ஒருவர் மீது டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கீழவளவு கிராமம் உள்ளது. நேற்று நள்ளிரவில் நவீன்குமார் என்பவர் மீது டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டுள்ளது. இதில் கார் அருகே நின்று கொண்டிருந்த நவீன்குமார் படுகாயமடைந்தார். அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக நவீன்குமார் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும், இந்த குண்டு வீச்சின் போது, நவீன்குமாருககு அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் கண்ணன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக தகவல் அறிந்த கீழவளவு போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது, டிபன் வெடிகுண்டு வீசியவர்கள் தப்பியோடி விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டு வீச்சு சம்பவம் தேர்தல் காரணம் நடத்தப்பட்டதா, முன்விரோதம் காரணம் நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலூர் அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in