அதிர்ச்சி... காதலனை வீட்டுக்கு வரவழைத்து கணவனுடன் சேர்ந்து நகை, பணம் பறித்த இளம்பெண் கைது!

கைது செய்யப்பட்ட பூவிதா, ஏழுமலை, கிருஷ்ணன்.
கைது செய்யப்பட்ட பூவிதா, ஏழுமலை, கிருஷ்ணன்.BG

முன்னாள் காதலனை வீட்டிற்கு வரச்சொல்லி அடைத்து வைத்து நகை ,பணம் பறித்த வழக்கில் இளம்பெண் மற்றும் அவரது கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூவிதா
பூவிதா

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(37). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஜாபர்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பூவிதா என்ற இளம்பெண்ணுக்கும், ஆறு மாதத்திற்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் இருவரும் நெருங்கிய பழகி வந்தனர்.இந்த நிலையில், கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவருடன் பூவிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

ஏழுமலை
ஏழுமலை
கிருஷ்ணன்
கிருஷ்ணன்

இதற்கிடையே ஏற்கெனவே பழகிய விக்னேஸ்வரனுடன் செல்போனில் பூமிதா அடிக்கடி பேசிக் கொண்டிருந்துள்ளார். நேற்று இரவு விக்னேஸ்வரனை செல்போனில் தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு வருமாறு அவர் அழைத்துள்ளார். இதனால் மேற்கு ஜாஃபர்கான் பேட்டை பகுதியிலுள்ள பூவிதா இல்லத்திற்கு விக்னேஸ்வரன் சென்றார்.

அங்கு விக்னேஸ்வரனை வீட்டினுள் பூவிதா அழைத்துச் சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த பூவிதாவின் கணவர் ஏழுமலை, அவரது நண்பர் கிருஷ்ணன் ஆகியோர் கத்தியைக் காட்டி மிரட்டி விக்னேஸ்வரனிடம் இருந்த வெள்ளி செயின் மற்றும் ஜிபே மூலம் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டனர்.

எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையம்
எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையம்

அவர்களிடமிருந்து தப்பி வந்த விக்னேஸ்வரன், சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில், போலீஸார் மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஏழுமலை மீது கிண்டி, ஆவடி, செவ்வாப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

மேலும் பூவிதா திட்டமிட்டு தனது முன்னாள் காதலனை வீட்டிற்கு வரவழைத்து கணவர் மற்றும் அவரது நண்பர் உதவியுடன் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து பூவிதா. அவரது கணவர் ஏழுமலை மற்றும் நண்பர் கிருஷ்ணன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் காதலனை வீட்டிற்கு வரவழைத்து கணவர், நண்பருடன் சேர்ந்து இளம்பெண் நகை, பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in