தங்கம் கொள்ளை வழக்கு... மேலும் மூவர் சிக்கினர்... தனிப்படை போலீஸார் அதிரடி!

மீட்கப்பட்ட நகைகளுடன் கோவை  ஐ.ஜி பவானீஸ்வரி
மீட்கப்பட்ட நகைகளுடன் கோவை ஐ.ஜி பவானீஸ்வரி

காரிமங்கலம் அருகே 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும்  3 பேர் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம்  28ம்தேதி கர்நாடகாவில் இருந்து கோவைக்கு நகைகள் வாங்கிச் சென்ற பிரசன்னா என்பவரை பின்தொடர்ந்து வந்த கொள்ளை கும்பல் ஒன்று  தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பூலாப்பட்டி அருகே, காரை வழிமறித்து காரில் இருந்தவர்களை கடுமையாக தாக்கி காருடன் 5.9 கிலோ தங்கம் மற்றும்  பணம் 60 லட்சம் ரூபாயை கடத்திச் சென்றனர்.

இதுதொடர்பாக பிரசன்னா காரிமங்கலம் காவல் நிலையத்தில்  அளித்த புகாரின் பேரில்  பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. 

சொகுசு காரை மட்டும் கொள்ளையர்கள் விட்டுவிட்டு, தங்க நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் தீவிரமாக பல்வேறு மாநிலங்களில் செல்போன் தொடர்பு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் இந்த கொள்ளை சம்பவத்தில் 15 பேர் ஈடுபட்டதும், அவர்கள்  அனைவரும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து வந்த குற்றவாளிகளை  10 தனிப்படை போலீஸார் பின் தொடர்ந்து சென்னையில் தங்கியிருந்த 9 குற்றவாளிகளை முதலில் கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து கடத்தப்பட்ட  6 கிலோ தங்கம் மற்றும்  19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த 6 குற்றவாளிகளில் ஆசிப் (32), விஷ்னு (27), அக்க்ஷய் சோனு (22) ஆகிய 3 பேரை ஓசூரில் நேற்று தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in