நாட்டையே பதற வைத்த மின்னஞ்சல்... 24 விமான நிலையங்களில் தீவிர பாதுகாப்பு; பல மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

விமான நிலையங்கள் எச்சரிக்கை
விமான நிலையங்கள் எச்சரிக்கை

பயங்கரவாதிகள் 111 என அழைக்கப்படும் குழுவிடமிருந்து வந்த ஒரு ஆபத்தான மின்னஞ்சல் காரணமாக, நாடு முழுவதும் உள்ள 24 விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை காலை 9.27 மணிக்கு வந்த இந்த மின்னஞ்சல் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்கு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. 666darktriad666@gmail.com என்ற இமெயில் முகவரியில் இருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல் காரணமாக பாதுகாப்புப் படைகள் அதிக எச்சரிக்கையுடன் கண்காணிப்பை தீவிரமாக்கியுள்ளன. இந்த மின்னஞ்சலில், விமான நிலையங்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும், பல விமானங்களில் ஐஈடி வெடிகுண்டுகள் வெடித்து இரத்தக்களரி ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

மின்னஞ்சல் வந்தவுடன், மூத்த விமான நிலைய அதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து நாக்பூர் நகர போலீஸார் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்தில் விரைவாக குவிக்கப்பட்டனர்.

விமான நிலையங்களில் பாதுகாப்பு
விமான நிலையங்களில் பாதுகாப்பு

மின்னஞ்சலில் கடுமையான அச்சுறுத்தல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள போதிலும், இது நம்பகமான பயங்கரவாத அச்சுறுத்தலை விட புரளியாக இருக்கலாம் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும், ”பாதுகாப்பு அமைப்புகள் முடுக்கிவிடப்பட்டதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். நாக்பூர் விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் இல்லை. முழுமையான சோதனைகள் நடத்தப்பட்டன” என்று ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல் எச்சரிக்கையை தொடர்ந்து, மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படை, மாநில மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் சிஐஎஸ்எஃப் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு மகாராஷ்டிர விமானநிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விமான நிலையம்
விமான நிலையம்

இந்த எச்சரிக்கையால், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு ஒத்திகைகள் மற்றும் நாசவேலை எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒத்திகைகள் நடந்து வருகின்றன. இனி வரவிருக்கும் நாட்களில் அதிக எச்சரிக்கையுடன் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அச்சுறுத்தல் மின்னஞ்சல் விமான நிலையங்கள் மட்டுமின்றி சிஐஎஸ்எஃப் பிரிவுகள், ஒரு வங்கி, வணிகக் குழு, மருத்துவமனைகள் மற்றும் பிற அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே அனைத்து தரப்பிலும் அச்சுறுத்தலைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். "அடுத்த சில நாட்களுக்கு பல மாநிலங்களிலும் உள்ள விமான நிலையங்கள் 'உயர் எச்சரிக்கையுடன்' இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அரசு உஷார்... கேரளாவில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!

பழிக்குப்பழி... திருச்சியில் பிரபல ரவுடி முத்துக்குமார் பட்டப்பகலில் படுகொலை!

தூக்க கலக்கத்தில் பாறையில் மோதிய வேன் ஓட்டுநர்... 31 பேர் படுகாயம்!

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர்... சுற்றி வளைத்து கைது செய்த போலீஸார்!

கார் மீது சிலிண்டர் லாரி மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in