
சீனாவில் பன்றி மற்றும் ஆட்டு இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்ய, லாரியில் பூனைகள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகில் மிகவும் வித்தியாசமான மற்றும் அரிதான இறைச்சி உணவுகளை சாப்பிடுவதில் சீனா முன்னணியில் உள்ளது. பாம்புகள் முதல் பூரான், தேள், வெளவால் வரை சீனர்களின் மெனுவில் இடம்பெறாத ஜீவராசிகளே இல்லை எனலாம்.
இந்நிலையில் சீனாவின் ஜங்ஜியாகங்க் பகுதியில் இறைச்சிக்காக பூனைகள் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து விலங்கு நல ஆர்வலர்கள் கடந்த ஒரு வாரமாக ஆய்வு நடத்தி வந்தனர். அந்த பகுதியில் ஒரு மரப்பெட்டியில் பூனைகளை அடைத்து எடுத்து செல்லப்படுவதை அறிந்த விலங்கு நல ஆர்வலர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரப்பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 1000 பூனைகளை மீட்டனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பூனைகள் இறைச்சிக்காக எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. இந்த பூனைகளின் இறைச்சியை ஒரு வாரம் வரை பதப்படுத்தினால், அது பன்றி இறைச்சியை போல மாறி விடுவதால், இதை பன்றி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்து வந்தனர் என்பது தெரியவந்தது.
இந்திய மதிப்பில் ஒரு கிலோ பூனை ரூ.332 வரை விற்பனை செய்யப்பட்டதும், பல மாதங்களாக இந்த மோசடி இறைச்சி வியாபாரம் நடைபெற்று வந்துள்ளதும் தெரியவந்துள்ளதால், சீனாவில் உள்ள இறைச்சி பிரியர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் நாட்டு மக்கள்!
அதிர்ச்சி... சேலம் ஆர் ஆர் பிரியாணி கடைக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்!
மகன் சாவில் மர்மம்... கண்டுகொள்ளாத போலீஸ்; வேதனையில் தாய், மகள் தற்கொலை
நாளை சந்திர கிரகணம்... குரு சந்திர யோகமும்... ராசிகளின் கூட்டணியும்!
இஸ்ரேல் குண்டுவீச்சில் குடும்பமே பலி... அடுத்த நாளே போர்க்களத்தில் களமிறங்கிய செய்தியாளர்!