உள்ளே சென்றார்; வெளியே வர முடியவில்லை!- திருடனால் நடந்த காமெடி

உள்ளே சென்றார்; வெளியே வர முடியவில்லை!- திருடனால் நடந்த காமெடி

அம்மன் கோயில் சுவரில் துளையிட்டு உள்ளே சென்று கொள்ளையடித்துவிட்டு திரும்பியபோது துளையில் சிக்கி தவித்துள்ளார் கொள்ளையர். கடைசியில் காவலர்களிடம் மாட்டிக்கொண்டார். இந்த காமெடி சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகோட்டம் மாவட்டத்தை சேர்ந்த பாப்பா ராவ் என்பவர் ஜடுபிடி கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் கொள்ளையடிக்க சென்றுள்ளார். கோயில் சுவரில் துளையிட்டு உள்ளே சென்ற பாப்பா ராவ் அங்குள்ள நகைகளை வாரி சுருட்டியுள்ளார். பின்னர் துளை வழியாக வெளியே செல்ல முயன்றுள்ளார். ஆனால், அவரது உடல் துளைக்குள் மாட்டிக் கொண்டது. வெளியே வர முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் பாப்பா ராவ் சோர்வடைந்துவிட்டார்.

இதைப் பார்த்த பொதுமக்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், துளைக்குள் சிக்கி 6 மணி நேரமாக போராடிய பாப்பா ராவை மீட்டு காவல்துறையினர் கைது செய்தனர். மது போதையில் திருடி விட்டதாக பாப்பா ராவ் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.