இவர்களும் வாக்களிக்கலாம்... தமிழக சிறைகளில் உள்ள 80 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர்!

இவர்களும் வாக்களிக்கலாம்... தமிழக சிறைகளில் உள்ள 80 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர்!

தமிழக சிறைகளில் உள்ள 80 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர். வாக்களிக்க விண்ணப்பித்த 96 கைதிகளில் 80 கைதிகள் வாக்களித்த நிலையில், 10 பேர் வரும் 16 ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர்.

மக்களவைத் தேர்தலையொட்டி முழுமையாக வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை அனைவருக்கும் கொண்டு செல்லும் முனைப்பில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது வயதோனோர் மற்றும் காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது வருகிறது.

தபால் வாக்கு
தபால் வாக்கு

அதன்படி தற்போது தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் வாக்கை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது‌. தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 4 சிறப்பு பெண்கள் சிறைகள், 4 சிறப்பு கிளைச் சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 10 கிளைச் சிறைகள், 3 திறந்தவெளி சிறைகள் உள்ளது.

இங்கு தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள் உள்பட சுமார் 16 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணைக் கைதிகள், குறிப்பிட்ட நாட்களுக்குப் பின், பிணையில் சென்றுவிட முடியும் என்பதால், அவா்களுக்கு சிறையில் இருந்து வாக்களிக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. மேலும் குண்டா் தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சிறையில் இருப்பவா்கள் மட்டும் வாக்களிக்க தமிழக சிறைத் துறை அனுமதி வழங்கி உள்ளது.

புழல் சிறை
புழல் சிறை

இதில் 96 கைதிகள் தபால் வாக்கு பதிவு செலுத்த விண்ணப்பித்திருந்தனர். கைதிகள் தங்களது பெயா், தொகுதி, வாக்காளா் அடையாள அட்டை, பூத் எண் உள்ளிட்ட விவரங்களைக் கொடுத்து சிறைத்துறை மூலம் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தனர். 96 பேரில் 90 கைதிகளுக்கு மட்டுமே வாக்களிக்க தகுதி இருப்பதாக கூறி சிறைத் துறை அவர்களுக்கு அனுமதி வழங்கியது.

இந்த தகுதி பெற்ற 90 கைதிகளில் 79 கைதிகள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் நேற்று தபால் மூலம் தங்களது வாக்கைப் பதிவு செய்துள்ளனர்.

சேலம் மத்திய சிறையில் ஒரு கைதி நேற்று வாக்குப் பதிவு செய்துள்ள நிலையில், வேலூர் மத்திய சிறையில் உள்ள 10 கைதிகள நாளை மறுநாள் (16 ஆம் தேதி) தங்களது தபால் வாக்கைப் பதிவு செய்ய உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...   

ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது... ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு!

ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண் மீது பாஜகவினர் தாக்குதல்... திருப்பூரில் பரபரப்பு; அதிர்ச்சி வீடியோ!

தெலங்கானாவில் இருந்து ரயிலில் போதை மாத்திரைகள் கடத்தல்... சென்னையில் 3 பேர் கைது!

ப்ளீஸ்... இதையாவது செய்யுங்க... ரஜினிக்கு நெருக்கடி தரும் பாஜக!

குடியால் நேர்ந்த சோகம்...30 வயதில் அகால மரணம் அடைந்த பிரபல பாடகி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in