`ஆபாச வீடியோக்கள் அனுப்பி தொந்தரவு செய்கிறார்கள்'- நடிகரின் மனைவி கொந்தளிப்பு

`ஆபாச வீடியோக்கள் அனுப்பி தொந்தரவு செய்கிறார்கள்'- நடிகரின் மனைவி கொந்தளிப்பு

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அடையாளம் தெரியாத நபர்கள் ஆபாசமாக வீடியோக்களை அனுப்புவதாகவும், இது குறித்து காவல் துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கொந்தளித்துள்ளார் நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி.

நடிகை தேவையானியின் சகோதரான நடிகர் நகுல், ஸ்ருதி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவுகளையிடுவதன் மூலமும் பிரபலமாக இருந்து வருகின்றனர். குறிப்பாக நகுல் மற்றும் ஸ்ருதி `வாட்டர் பெர்த்' என்ற முறையில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த வீடியோ வைரலாகப் பேசப்பட்டது. இந்நிலையில், நகுல் மனைவி ஸ்ருதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஆபாசமாக வீடியோக்கள் மற்றும் கருத்துகளை அனுப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "முதல்முறை இல்லாமல் பலமுறை இதுபோன்று ஆபாச வீடியோக்களும் கருத்துகளையும் அனுப்பி தொந்தரவு செய்கின்றனர். குறிப்பாக பெண்களின் ஆடை மற்றும் ஒழுக்கத்தைப் பற்றி எப்போதும் தவறான கருத்துகளைப் பதிவிடுகின்றனர். அதுவும் நவீன ஆடைகளை அணியும் பெண்களுக்கு இதுபோன்று ஆபாச வீடியோவை ஆண்கள் அனுப்பலாம் என எப்படி நினைக்கிறார்கள். தன்னைப் போன்ற பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் இது போன்ற பதிவுகளைத் தவிர்த்து சமூக வலைதளப் பக்கத்தில் புகார் அளித்ததன் மூலம் அந்தப் பக்கத்தை பிளாக் செய்வதே தொடர்ந்து செய்து வருகிறேன்.

கடுமையான விதிகள் கொண்டுவரப்படும்வரை, இது போன்ற விஷயங்களில் மாற்றம் ஏற்படாது. பாதிக்கப்பட்ட பலரும் புகார்கள் அளித்தும், காவல் துறையில் எந்த வித நடவடிக்கைகளும் இல்லை. பெரும்பாலானோர் பயப்படுகின்றனர். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், இது போன்ற செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்க நினைப்பவர்கள் சோர்வடைந்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in