ஓடும் பேருந்தில் டாக்டரை நோட்டமிட்டு நகைப் பையை திருடிய கும்பல்!


ஓடும் பேருந்தில் டாக்டரை நோட்டமிட்டு நகைப் பையை திருடிய கும்பல்!

பேருந்தில் சென்ற மருத்துவர், அதில் தான் நகைகளுடன் வைத்திருந்த கைப்பை கண நேரத்தில் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

நன்னிலம் மடவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் அண்ணாமலை (24). இவர் எம்பிபிஎஸ் முடித்து மருத்துவராக பணி புரிந்து வருகிறார். அண்ணாமலை தனது மனைவி மற்றும் தாயாரை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வழியாக வடலூரில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு வந்தார்.

தனது மனைவி மற்றும் தாயாருடன் வடலூர் செல்லும் அரசு பேருந்தில் அண்ணாமலை ஏறினார். அப்போது தான் கொண்டு வந்திருந்த கைப்பையை பேருந்தில் பொருட்கள் வைக்கும் மேல்தட்டில் வைத்துள்ளார். அந்த கைப்பையில் அண்ணாமலையின் மனைவி மற்றும் தாயாருடைய நகைகள் இருந்துள்ளது.

இந்த நிலையில் பேருந்து புறப்பட்டு சிறிது நேரம் கழித்து நால்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது தன்னுடைய கைப்பை வைத்த இடத்தில் இருக்கிறதா என அண்ணாமலை பார்த்துள்ளார். ஆனால் அவருடைய கைப்பை அங்கிருந்து மாயமாகி இருந்தது. அதனைத்கண்டு அண்ணாமலை அதிர்ச்சி அடைந்தார். பேருந்து முழுவதும் அண்ணாமலை தனது கைப்பையை தேடியும் கிடைக்காததால் பேருந்தில் இருந்து இறங்கி கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு வந்தார்.

அங்கிருந்த போலீஸாரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவித்தார். அவர்களின் வழிகாட்டலில் இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் பேருந்தில் இருந்த நகைப்பையை திருடி சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in