அதிர்ச்சி... போலி சாவி தயாரித்து 10 சவரன் நகைத் திருட்டு: பக்கத்து வீட்டில் கைவரிசை காட்டிய பெண் கைது!

அதிர்ச்சி... போலி சாவி தயாரித்து 10 சவரன் நகைத் திருட்டு: பக்கத்து வீட்டில் கைவரிசை காட்டிய பெண் கைது!

போலி சாவி தாயார் செய்து பக்கத்து வீட்டில் இருந்த பீரோவில் இருந்த 10 சவரன் நகைகளை திருடிய சரித்திர பதிவேடு குற்றவாளி மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை புச்சம்மாள் தெருவை சேர்ந்தவர் பூமாதேவி(46). இவரது கணவர் முருகேசன் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி பூமாதேவி தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் தனது மகளை அழைத்து வருவதற்காக வீட்டை பூட்டி சாவியை வீட்டருகே மறைத்து வைத்துவிட்டு சென்றுள்ளார். பள்ளியில் இருந்து மகளை அழைத்து வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.

இது குறித்து பூமாதேவி சட்ட வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுப்புலட்சுமி (28) என்ற பெண் நகையை திருடியது தெரியவந்தது. தொடர் விசாரணையில் சுப்புலட்சுமி கணவர் அப்பு என்ற சிட்டிசன் விக்னேஷ்வரன் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது. மேலும் சம்பவத்தன்று பூமாதேவி வீட்டை பூட்டி சாவியை மறைத்து வைத்ததை பார்த்த சுப்புலட்சுமி அவர் பள்ளிக்கு சென்ற பின்பு சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.‌

பின்னர் பீரோ பூட்டி இருந்ததால் அதே பகுதியில் பூட்டு பழுது பார்க்கும் நபரை அழைத்து வந்து பீரோ சாவி தொலைந்துவிட்டது என்று பொய் சொல்லி போலி சாவி தயார் செய்து பீரோவை திறந்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.‌ இதனை அடுத்து போலீஸார் சுப்புலட்சுமியை கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in