பரபரப்பு… 'தீரன்' படப்பாணியில் சென்னையில் கொள்ளை... பொதுமக்கள் அதிர்ச்சி!

சோழன், வனஜா
சோழன், வனஜா

சென்னையில் 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்பட பாணியில் அதிகாலை வீட்டின் கதவைத் தட்டி 70 சவரன் நகை, மூன்றரை லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரியான சோழன் (66) என்பவரின் மகன்கள், மகளுக்கு திருமணமான நிலையில், அவர் தனது மனைவி வனஜாவுடன் வசித்து வருகிறார். தம்பதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை 3 மணிக்கு வீட்டின் கதவு தட்டப்பட்டது.

தூக்க கலக்கத்தில் வனஜா கதவை திறந்துள்ளார். அப்போது முகமூடி அணிந்த 5 பேர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து, இருவரையும் மிரட்டி, 75 சவரன் நகை மற்றும் மூன்றரை லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

நகைகள்
நகைகள்

இதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சோழன் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல், தடயவியல் துறையினரும் மாதிரிகளை சேகரித்துள்ளனர்.

மேலும், காவல்துறையினர் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்பட பாணியில் கத்தி முனையில் வயதான தம்பதியரிடமிருந்து நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in