இடைவேளை நேரத்தில் வந்து கமல் படத்திற்கு டிக்கெட் கேட்ட போதை ஆசாமிகள்: தரமறுத்த திரையரங்க ஊழியர்கள் மீது தாக்குதல்!

இடைவேளை நேரத்தில் வந்து கமல் படத்திற்கு டிக்கெட் கேட்ட போதை ஆசாமிகள்: தரமறுத்த திரையரங்க ஊழியர்கள் மீது தாக்குதல்!

இடைவேளை நேரத்தில் மதுபோதையில் டிக்கெட் கேட்டு தகராறு செய்த மர்ம கும்பல் ஒன்று திரையரங்க ஊழியர்களைச் சரமாரியாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவள்ளூர், தேரடி பகுதியில் உள்ள ராக்கி திரையரங்கில் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. மது அருந்தி விட்டு வருபவர்களுக்கு டிக்கெட்டுகள் கொடுப்பதை திரையரங்கு நிர்வாகத்தினர் தவிர்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மதியம் இடைவேளை நேரத்தில் வள்ளுவர் புரத்தைச் சேர்ந்த கோகுல் கொடியரசு, சுகன் ஆகியோர் டிக்கெட் கேட்டதாகக் கூறப்படுகிறது. இடைவேளை விடப்படும் நேரம் என்பதாலும், மது அருந்திவிட்டு வந்த காரணத்தாலும் உங்களுக்கு டிக்கெட் கொடுக்க முடியாது எனத் திரையரங்க ஊழியர்கள் அவருக்கு டிக்கெட் கொடுக்க மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சிறிது நேரத்தில் 10 பேர் கொண்ட அடியாட்களுடன் திரையரங்கில் நுழைந்தனர். மேலும் அங்கு பணிபுரிந்து வரும் விக்னேஷ் என்ற ஊழியரைச் சரமாரியாகத் தாக்கி உள்ளனர். இதையடுத்து திரையரங்க மேலாளர் அரசு என்பவர் திருவள்ளூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், திரையரங்க ஊழியர்களைத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in