கிணற்றில் மிதந்த இளம்பெண்ணின் சடலம்... இறுதிச்சடங்கில் பங்கேற்க 430 கிமீ பைக்கில் பயணித்த இளைஞர்: பதைபதைக்கும் சம்பவம்!

கிணற்றில் மிதந்த இளம்பெண்ணின் சடலம்... இறுதிச்சடங்கில் பங்கேற்க 
430 கிமீ பைக்கில் பயணித்த இளைஞர்: பதைபதைக்கும் சம்பவம்!

கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த இளம்பெண்ணின் தகன நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர், சிதையில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம், சாஹர் மாநிலம் மஞ்குவாவைச் சேர்ந்தவர் ஜோதி(எ) ப்ரீத்தி டங்கி(21). கடந்த வியாழக்கிழமையன்று இவர் வயல் வெளிக்குச் சென்ற போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். இரவாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அவரைத் தேடியலைந்தனர். இந்த நிலையில், அடுத்த நாள் காலை ஜோதியின் உடல் கிணற்றில் மிதந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தந்தது.

இதையடுத்து அவரது உடலை மீட்டனர். வெள்ளிக்கிழமையன்று ஜோதியின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அவரது உறவினரான கரண், 420 கிமீ தொலைவில் இருந்து டூவீலரில் பயணம் செய்து மஞ்குவாவிற்கு வந்தார். இடுகாட்டில் ஜோதியின் உடலுக்கு அவரது தந்தை எரியூட்டினார். அப்போது இறுதிச்சடங்கில் பங்கேற்ற கரண், யாரும் எதிர்பாராத நேரத்தில் ஜோதி எரிந்த சிதையில் குதித்தார். இதனால், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரைக் காப்பாற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கரண் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in