15 பேருடன் திருமணம்… நகை, பணத்துடன் எஸ்கேப்: பெண் நடத்திய திருவிளையாடல்!

15  பேருடன் திருமணம்… நகை, பணத்துடன் எஸ்கேப்: பெண் நடத்திய திருவிளையாடல்!

பல்வேறு பெயர்களில் 15 பேரை திருமணம் செய்து அவர்களிடம் நகை, பணம் கொள்ளையடித்த பெண் உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேசம் மாநிலம், போபாலைச் சேர்ந்தவர் காந்தா பிரசாத் நாத். இவர் திருமணத்திற்குப் பெண் பார்த்து வந்தார். இந்த நிலையில் தினேஷ் என்பவர், தனது உறவுப்பெண் பூஜாவிற்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக கூறியுள்ளார். இதனால் காந்தா பிரசாத் நாத்திற்கு, பூஜாவை பார்த்ததும் பிடித்துப் போனது. இதையடுத்து தினேஷ் ஏற்பாட்டின் பேரில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் திருமணம் முடிந்த 8-வது நாளில் தினேஷின் மனைவி தனக்கு உடல்நலன் சரியில்லை என பூஜாவிற்கு போன் செய்துள்ளார். இதனால் அவரது வீட்டிற்கு தனது மனைவி பூஜாவை பிரசாத் அனுப்பி வைத்தார். அங்கு போன பூஜா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், தினேஷூக்கு பிரசாத் போன் செய்துள்ளார். அவரது போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் பிரசாத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் வீட்டில் பீரோவில் இருந்த நகை, பணம் ஆகியவை காணாமல் போயிருந்தது.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரசாத், காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து பூஜாவை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான விஷயங்கள் வெளியாகின. பூஜாவின் உண்மையான பெயர் சீமா கான் என்றும், அவர் இதுவரை 15 திருமணங்கள் செய்ததும் தெரிய வந்தது. ஒவ்வொரு திருமணத்தின் போதும், மாப்பிள்ளை வீட்டில் இருந்து நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் செல்வதை அவர் வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். பூஜா என்ற பெயர் மட்டுமின்றி ரியா, ரெனி என பல பெயர்களில் அவர் திருமணம் செய்து பலரை ஏமாற்றி நகை, பணம் கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.

ஒவ்வொரு திருமணம் முடிந்ததும் சீமா கானுக்கு 30 ஆயிரம் ரூபாய் தினேஷ் வழங்கியுள்ளார். இந்த மோசடிக் கொள்ளைக் கும்பலில் 15-க்கும் மேற்பட்டோர் உள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது 3 பெண்கள் உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 8 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் போபாலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in