
மாமனார் படுத்துக் கொண்டிருந்த அறைக்கு மருமகள் தீ வைத்துள்ள சம்பவம் தொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில், ஒரு பெண் தனது மாமனாரின் அறைக்கு கையில் காகிதத்துடன் செல்கிறார். பின்னர் திடீரென காகிதத்தை பற்ற வைத்து அதனை தூங்கிக்கொண்டிருக்கும் மாமனாரின் படுக்கையின் மீது வீசுவதாக அந்த வீடியோ உள்ளது. அந்த பெண்ணின் கணவன் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும் முதியவரின் படுக்கையில் எரியும் காகிதத்தை அணைக்க அவசரமாக அவர் ஓடுவதும் பின்னர் தீயை அணைப்பதும் தெரிகிறது.
இதனிடையே சமூக வலைதளமான எக்ஸ் ல் வீடியோவை வெளியிட்ட நபர், அந்த பதிவில், மாமனார் அறைக்கு அந்த பெண் தீ வைக்க அவர் விரக்தியில் இருந்தது தான் காரணம் என்று கூறியுள்ளார். தன் குழந்தைக்கு உணவளிக்க அந்த பெண் விரும்பி உள்ளார். ஆனால் குழந்தை தூக்கத்தில் இருந்தது. இதனால் குழந்தையைத் தொடர்ந்து தூங்க அனுமதிக்குமாறு மாமனார் வலியுறுத்தி உள்ளார்.
தனது குழந்தைக்கு உணவளிப்பதை மாமனார் விரும்பவில்லை என்பதால் விரக்தி அடைந்த பெண், கோபத்தில் மாமனாரின் அறைக்கு தீ வைக்க முயன்றுள்ளார். மருமகளின் இந்த திடீர் செயலால் அதிர்ச்சி அடைந்து கண் திறக்கிறார் முதியவர். இதனிடையே வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபர், தனது தந்தையின் படுக்கை எரிவதைக் கண்டு உடனே ஓடிச்சென்று அணைக்கிறார். அத்துடன் தனது மனைவியையும் கடுமையாக கண்டிக்கிறார். அந்த பெண் இந்தியில் ஏதோ பேசுவதும், அதன்பின்னர் சாப்பிட அனுமதிக்கவில்லை என்றால், இந்த கதி அவருக்கு ஏற்படும் என்றும் எச்சரிக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தீ வைத்த பெண்ணின் செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.