பால் ஊற்ற வந்த இளைஞருடன் டீல்... தட்டிக்கேட்ட கணவனை தரிசாக்கிய மனைவி!
தென்காசியில் வீட்டிற்கு பால் ஊற்ற வந்த இளைஞருடன் பழக்கமானதால், அதனைக் கண்டித்த கணவனை அந்த இளைஞருடன் சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சுவாமி சன்னதி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 41). ஓட்டல் தொழிலாளி. இவருக்கு கனகா என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் வீட்டிற்கு அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் பால் கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கனகாவிற்கும் விக்னேஷுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.
மாரியப்பன் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதையே வாடிக்கையாக வைத்திருந்த நிலையில், ஒரு நாள் மாரியப்பன் வீடு திரும்பிய நிலையில், விக்னேஷும் கனகாவும் தனிமையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இருவரையும் கண்டித்துள்ளார். அன்றிலிருந்து விக்னேஷ் பால் கொடுப்பதையும் நிறுத்தியுள்ளார்.
விக்னேஷ் சந்திக்க முடியாமல் தவித்த கனகா, தடையாக இருக்கும் கணவனைப் போட்டுத்தள்ள வேண்டும் என விக்னேஷிடம் கூறியுள்ளார். அதற்கு விக்னேஷும் சம்மதம் தெரிவித்த நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மாரியப்பன் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக புறப்பட்டு சென்றுள்ளார்.
அதன்பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவர் புளியங்குடி அருகே திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையோரம் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாரியப்பனின் உறவினர்கள், போலீஸில் புகார் அளித்தனர்.
போலீஸார் கனகா மற்றும் விக்னேஷிடம் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் உண்மையை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து கொலையில் தொடர்புடைய கனகாவையும் போலீஸார் கைது செய்தனர். இன்று காலை விக்னேஷ், கனகா ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையும் வாசிக்கலாமே...
இளம்பெண் தற்கொலை... ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் விடிய விடிய போராட்டம்!
குட்நியூஸ்... தமிழக அரசில் 368 காலிப்பணியிடங்கள்... உடனே விண்ணப்பிக்கவும்!
‘பாஸ்போர்ட் ஊழல்’ ஒரே நேரத்தில் 50 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு!
பிரபல நகைச்சுவை நடிகர் அதிரடி கைது! திரையுலகில் பரபரப்பு!
பகீர்... காதலி வீட்டார் மயக்க மருந்து கொடுத்து சுன்னத் செய்து விட்டனர்... கதறும் காதலன்!