காங்கிரஸ் பிரமுகர் ஷாக்... சாப்பிட்ட கேக்கில் சிக்கிய பல் செட்!

கேக்
கேக்

விழுப்புரத்தில் பேக்கரியில் விற்கப்பட்ட கேக்கில் நான்கு பற்கள் கொண்ட பல்செட் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் முபாரக் அலி. காங்கிரஸ் பிரமுகரான இவர் நேற்று காலை தனது நண்பர்களுடன் நடைபயிற்சி சென்று விட்டு, கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள தேநீர் கடைக்கு சென்றனர் அங்கிருந்த கேக்கை தனது நண்பர்களுடன் முபாரக் அலி வாங்கி சாப்பிட்டார். அப்போது, 4 பற்கள் கொண்ட பல்செட் அதிலிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதைத் தொடர்ந்து முபாரக் அலியும், அவரது நண்பர்களும் தேநீர் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் அளித்த தகவலின் பேரில், உணவுப் பாதுகாப்புத் துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது விழுப்புரம் அருகே உள்ள ராதாபுரத்தில் தயாரிக்கப்பட்ட கேக் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கேக்கில் பல்செட் இருந்த சம்பவம், விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in