ஈரோடு : அதிர்ச்சி... விஷக்காய் சாப்பிட்ட 20 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

ஈரோடு : அதிர்ச்சி... விஷக்காய் சாப்பிட்ட 20 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

ஈரோடு மாவட்டத்தில் அம்மாப்பேட்டைப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் விஷக்காய் என்று தெரியாமல் சாப்பிட்டதால், ஆபத்தான முறையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்மாபேட்டை அருகே உள்ள நத்தமேட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நத்தமேடு, பழனி வேல்புரம், ராமச்சந்திரபுரம், மணக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய 6 மற்றும் 7-ம் வகுப்பு படிக்கும் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட பெற்றோர் விசாரிக்கையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் காட்டுக்கொட்டை காயை (விஷக்கொட்டை) சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தைகளை சிகிச்சைக்காக பூனாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இத்தகவல் நத்தமேடு சுற்று வட்டாரத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

20 மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் என மொத்தம் 21 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு அம்மாபேட்டை போலீசார், கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு மாணவ, மாணவிகள் அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தால் பூனாச்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பூனச்சியில் முதலுதவி சிகிச்சை பெற்ற மாணவிகள் 5 பேர் இரவு குணமடைந்து வீடு திரும்பினர். தொடர்ந்து அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரும் நலமுடன் உள்ளதாகவும், அனைவரும் இன்று வீடு திரும்பி விடுவார்கள் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in