ஆசிரியர்களின் செயலால் விபரீத முடிவெடுத்த மாணவன்

பாய்ந்தது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு
ஆசிரியர்களின் செயலால் விபரீத முடிவெடுத்த மாணவன்

ஆசிரியர்கள் கேலி, கிண்டல் செய்ததால் வேதனையடைந்த பள்ளி மாணவன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை ராமாபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார். கடந்த 7-ம் தேதி அந்த பெண் ராயலா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனக்கு திருமணமாகி 15 வயதில் மகனும், 12 மகளும் உள்ளனர். எனது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில்

தனது இரு பிள்ளைகளும் சென்னை ராமாபுரத்தில் இயங்கி வரும் ஸ்ரீ சைதன்யா டெக்னோ என்ற தனியார் பள்ளியில் பிடித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 9-ம் வகுப்பு படித்து வரும் தனது மகன் பள்ளியில் விளையாடி கொண்டிருந்தபோது படிக்கட்டில் கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த மகன் இரு மாத சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு செல்ல தொடங்கினார். மேலும் கால் முறிவு காரணமாக தனது மகன் பள்ளி படிக்கட்டில் ஏறி செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனை கண்ட அப்பள்ளியின் வேதியியல் ஆசிரியர் சீதாசந்திரன் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் சுரேஷ் ஆகியோர் சக மாணவர்கள் முன்னிலையில் தன் மகனை கேலி, கிண்டல் செய்வதாக தன்னிடம் அழுது வருத்தப்பட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அவனை சமாதானம் செய்து மீண்டும் பள்ளிக்கு அனுப்பியதாகவும், கடந்த 7-ம் தேதி பள்ளி விட்டு வீட்டிற்கு வந்த மகன் சோர்வாக இருந்ததாகவும், சிறிது நேரம் கழித்து கையில் பேப்பருடன் வந்த அவர், அழுது கொண்டே தன்னிடம் பேப்பரை கொடுத்து விட்டு, இன்று படிக்கட்டில் ஏறி பள்ளிக்கு செல்ல 10 நிமிடங்கள் தாமதமானதால், ஆசிரியர்கள் சுரேஷ், சீதாசந்திரன் மற்றும் டீன் ஆகியோர் எங்கே சென்றாய், எவளோடு பேசி கொண்டு இருந்தாய் என தகாத வார்த்தையால் பேசி தன்னை அனைவரின் முன்னிலையில் கேலி, கிண்டல் செய்து அவமானம் படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள எண்ணி அளவுக்கதிகமான மாத்திரை உட்கொண்டதாகவும், தனது மரணத்திற்கு பள்ளி ஆசிரியர்கள் காரணம் என கூறியதாக குறிப்பிட்டுள்ளார். உடனே தனது மகனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்ததாக தெரிவித்த பெற்றோர் தன் மகனை கேவலமாக பேசி அவமானம் படுத்திய இரு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் கேட்டுக்கொண்டார்.

இப்புகாரின் அடிப்படையில் ராயலா நகர் போலீஸார், ஆசிரியர்கள் சீதா சந்திரன் மற்றும் சுரேஷ் ஆகியோர் மீது தற்கொலை செய்து கொள்ள தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். மேலும் இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in