தயாநிதி மாறன் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட ரூ.1 லட்சம்... ஆக்சிஸ் வெளியிட்ட ஆச்சரிய தகவல்!

தயாநிதி மாறன் எம்.பி
தயாநிதி மாறன் எம்.பி

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்ட பணம் திரும்ப கிடைத்துவிட்டதாக ஆக்சிஸ் வங்கி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியுமான தயாநிதி மாறன் அக்.9-ம் தேதியன்று புகார் ஒன்று கொடுத்தார். தனக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதன் பின் தன் மற்றும் தனது மனைவியின் ஜாயின்ட் வங்கி கணக்கிலிருந்து ரூ.99.999 எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வங்கி ஊழியர் போல பேசி பணப் பரிவர்த்தனை விபரங்களைக் கேட்டு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்ததாகவும், எந்த விபரங்களும் பகிரப்படாத நிலையிலும். அழைப்பு வந்த சிறிது நேரத்தில் தனது வங்கி கணக்கில் அங்கீகரிக்கப்படாத பணபரிவர்த்தனை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தயாநிதி மாறன் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் திரும்ப கிடைத்துவிட்டதாக ஆக்சிஸ் வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து ஆக்சிஸ் வங்கி நிர்வாகம் சார்பில் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், “ தயாநிதி மாறன் ஜாயின்ட் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்ட பணம் கண்டறியப்பட்டு, வங்கிக் கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சைபர் கிரைம் பிரிவு விசாரணைக்காக புகார் செய்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!

வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!

ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!

உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in