சலூன் கடைக்காரரை பார்த்து பயந்து ஓடிய சிறுமி; பெற்றோர் காட்டிய அதிரடி

சலூன் கடைக்காரரை பார்த்து பயந்து ஓடிய சிறுமி; பெற்றோர் காட்டிய அதிரடி

சென்னையில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சலூன் கடைக்காரரை போலீஸார் தேடிவருகின்றனர். ‌

சென்னை செனாய்நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை அவரது பெற்றோர் அருகில் உள்ள சலூன் கடைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறுமி சலூன் கடைக்காரரை பார்த்து பயந்து வீட்டிற்கு ஓடி வந்துள்ளார். இதைப் பார்த்து சந்தேகமடைந்த சிறுமியின் தாய் அவரிடம் விசாரணை செய்தபோது சலூன் கடைக்காரர் தன்னை bad touch செய்ததாக தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஆறு மாதத்திற்கு முன்பு இதுபோன்று செய்ததாகவும், இனிமேல் சலூன் கடைக்கு செல்ல மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் சலூன் கடைக்காரர் விஜயன்(50) மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீஸார் விஜயனை கைது செய்யச் சென்றபோது அவர் கடையை மூடிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸார் தலைமறைவான சலூன் கடைக்காரர் விஜயனை தேடி வருகின்றனர்.

பெற்றோர் பெண் குழந்தைக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி சொல்லி வைத்திருந்ததால் சலூன் கடைக்காரர் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in